Tuesday, July 26, 2011

கனவும் கலைந்தது..




மெல்லிய மலர்கள் இதழ் என்னும் 
இமை திறந்து கதிரவனை தேட ..? 

கதிரவனோ மேகத்திற்கு பின்னே 
ஒழிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆட.. 

கதிரவனை கண்டுபிடிக்க முடியாமல் 
அங்கும் , இங்குமாய் தேடி ..வாசனை 
என்னும் வார்த்தைகளை காற்றில் 
விட்டு அலைத்துகொண்டிருந்தது.. 

மூங்கில் மரங்களின் இலை நுனியில் 
தொங்கிக்கொண்டு உஞ்சல் ஆடும் பனித்துளி, 

தனக்கும் வாய்ப்பு தரும்படி கேட்கொண்டு 
பனித்துளியை சுற்றி வரும் மழலையாய் 
சிட்டு குருவி கூட்டங்கள் ..!! 

மலை சாரலில் நனைந்து ,சோம்பல் 
நீக்கி சுறுசுறுப்பாய் புள் கூட்டம்.. 
தனது குளிரை தனித்து கொள்ள 
ஒன்றோடு ஒன்று பிணைந்துகொண்டு 

பாவம் புற்களுக்கு வலிக்க கூடுமோ.? 
என்று அஞ்சி மெது மெதுவாய் 
அடி எடுத்து வைத்து வரும் 
மயில் கூட்டம்..! 

கதிரவனை காணாத மயில் கூட்டம் 
மலரின் கட்சியில் சேர்ந்து கொண்டு 
தன் பங்கிற்கு தோகையை விரித்து 
அசைந்தாடி கதிரவனை அழைக்க 

இனிய தென்றலில் அசைந்தாடும் 
மரங்களின் தாளத்திற்கு ஏற்ப்ப 
மெட்டெடுத்து பாடிக்கொண்டிருந்தது 
குயில் கூட்டம்..., 

மலரின் மழலை பேச்சும், கதிரவனின் 
மறைந்து நிக்கும் காட்ச்சியும்..,! 

சிறகு விரித்த மயிலின் கவர்ச்சியும்.. 
குயில்களின் இனிய கீர்த்தனை கிளைச்சியும் 

என் இதயத்தை இன்பமாய் 
வருடி கொடுக்க....அடடா .... 

என்ன அழகானவள் இந்த இயற்க்கை 

காதலில் மயங்கிய ஜோடி புறாக்கள் 
காதலை மட்டுமல்ல இதழ் முத்தத்தையும் 
பகிர்ந்துகொள்ள அருகருகே வர..!! 

கூச்சத்தில் கண்கள் மூடிக்கொண்டு 
நான் திரும்பிக்கொள்ள முயற்சித்த 
நேரம்...,? 

தட்டி எழுப்பினால் அம்மா 
காலையிலேயே வந்துவிட்ட 
வெப்பத்தால் வழிந்தோடும் 
நெற்றி வியர்வையை தனது 
முந்தானையில் அழுத்தி 
துடைத்தபடி..!! 

கனவும் கலைந்தது.. 
இதம் தந்த இயற்க்கை அழகும் 
மறைந்தது..,! 

இனி கிளம்ப வேண்டும்..! 
புகை கக்கும், வெப்ப காற்று வீசும் 
சாலை நெரிசல் மிக்க ரோட்டில் 
வேலைக்கு.. 

இயற்க்கை அழகை அளிக்காமல் இருக்க 
முயற்சியாவது செய்வோம்.. 

No comments:

Post a Comment