முதல் முதல் பார்த்த நொடி நமக்குள்
இல்லை..................................................
நிலா வெளிச்சத்தில் இருந்து கொண்டு
நிலவை ரசித்துக்கொண்டு உன் முகம்
பார்த்துக்கொண்டே உன்மடியில்
நான் தூங்கியதில்லை
காதல் மட்டும் இப்போதும் நமக்குள்
பயணங்கள் இருவரும் சேர்ந்து
செய்ததில்லை உந்தன் நிழலை
தொட்டதும் இல்லை தொடர்ந்ததும்
இல்லை நான்
காதல் மட்டும் இப்போதும் நமக்குள்
கடற்கரை சென்றதும் இல்லை அந்திவானின்
அழகை நாம் ரசித்ததும் இல்லை உந்தன்
கைவிரல் பிடித்து ஒவ்வொன்றிற்கும்
முத்தமிட்டதும் இல்லை நான் .....
காதல் மட்டும் இப்போதும் நமக்குள்
நீயோ தொலைதூரம் நம் நேசமோ
தொடுந்தூரம்
தெரிந்தும்
காதல் மட்டும் இப்போதும் நமக்குள்........
No comments:
Post a Comment