Thursday, July 28, 2011

நேற்று இல்லாத மாற்றங்கள் என்னிடம்.

எதற்காகவோ சிரிக்கிறேன் ஆனால் சிந்தனை 
வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது ....... 

மகிழ்ச்சியாக தான் இருக்கிறது மனநிலை ஆயினும் 
நெஞ்சில் ஏதோ கனம் கூடிப்போனதொரு தோற்றம்... 

எப்பொழுதும் சுற்றத்தார் புடைசூழ நின்றுகொண்டிருந்தும் தனிதுவிடப்பட்டதுபோல 
ஒரு மாயை..... 

உணவு உள்ளிறங்கி கொண்டிருக்கிறது பின்பு ஏன் பசியே இல்லாததொரு உணர்ச்சி..... 

தனிமையே இப்போது அதிகம்விரும்புகிறது மனது....... 

தாகமே இல்லாமல் தண்ணீர் தேடுகிறது நெஞ்சம்......... 

கிடைப்பதில் எல்லாம் ஏதேதோ கிருக்கிகொண்டிருக்கிறது கைகள்........ 

நடக்கும் பாதைகளெல்லாம் நடனமாட துடிக்கிறது கால்கள்......

கொதிக்கும் வெயிலில் நின்றுகொண்டிருக்கையில் மழையில் நனைவதுபோல மகிழ்ச்சி களிப்பு....... 

இதற்க்கு முன் நான் இப்படி இருந்ததில்லை 
உன்னை கண்டபின்புதான் எனது செயல்களில் இத்தனை மாற்றங்கள் . காரணம் நீ என்று மனம் அறிந்த பின்பும் மனநல மருத்துவரை நோக்கி பயணிக்கிறேன்..... 

எனது இந்த காதல் நோய்க்கு மருந்து நீ என்று அறிந்தும் கால்நடையாக தொடர்கிறது எனது சிகிச்சை பயணம்........... 

No comments:

Post a Comment