Wednesday, September 14, 2011

அன்பே....

அன்பே.....
நீ வெறுத்துப் பேசியபோது
சிரித்துப் பழகிவிட்டேனே
என்ன செய்வது ?

சிரிக்கின்ற இடத்தில்
நீ இருக்கிறாய்
ரசிக்கின்ற இடத்தில்
நானிருக்கிறேன்
என்ன செய்வது ?

என்ன செய்தும்
எழுத முடியாத
உன்னோடு இருந்த
மணித்துளியை
என்ன செய்வது ?

மரம் வீழ்ந்த பின்னாலும்
கிளை தேடும் பறவையாய்
என்ன செய்வது ?

என்னோடு இருந்த
தோழமை தொலைத்து
உன்னோடு இருந்த
என்னையும் தொலைத்து
காசைத் தொலைத்த சிறுமியாய்
என்ன செய்வது ?

ஆயிரம் முறை
விலாசம் எழுதிப்
போயிருக்கும்
உன் கண்களுக்கு
ஒருமுறை கூட
மடல் எழுத முடியாமல்
மௌனத்தில் கவிழ்ந்தன
இமைகள்...

எத்தனையோ முறை
பேசத் துடித்த உன்னிடம்
சலிப்பால் மட்டுமே
பேச மறுத்த இதழ்களை
என்ன செய்வது?

எனக்காக ஏங்கித் தவித்த
உன் இதயத்தை
தெரிந்தும் தட்டி விட்ட
என்னை என்ன செய்வது?

என்ன செய்வது இப்போது ...?
கதவோரத்தில் நின்று கொண்டு
அழுது தொலைக்கிறேன்

என்னை விட்டுத்
தனியாய் செல்லும்
உன் ஊர்வலத்தில்
நானும் என்ன செய்வது?

No comments:

Post a Comment