Saturday, August 6, 2011

சதாவரீ

1. தண்ணீர் விட்டான் கிழங்குச்சாறு – ஸதாவரீரஸ 2.560 கிலோ கிராம்
2. வெல்லம் – குட 2.560 “\

இவைகளைச் சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன், பசுவின் நெய் (க்ருத) 640 கிராம் சேர்த்து அத்துடன்

1. சுக்கு – சுந்தீ 10 கிராம்
2. ஏலக்காய் – ஏலா 10 “
3. நிலப்பனைக்கிழங்கு – முசலி 10 “
4. பாடக்கிழங்கு – பாத்தா 10 “
5. நெருஞ்சில் – கோக்ஷூர 10 “
6. நன்னாரி – ஸாரிவா 10 “
7. நன்னாரி (கருப்பு) – க்ருஷ்ணஸாரிவா 10 “
8. தார்தாவல்வேர் 10 “
9. பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ 10 “
10. திப்பிலி – பிப்பலீ 10 “
11. அதிமதுரம் – யஷ்டீ 10 “
12. சுத்தி செய்த கோமூத்ரசிலாஜது –
ஷோதித கோமூத்திர சிலாஜது 10 “
13. மூங்கிலுப்பு – வம்ஸலோசன 10 “
14. சர்க்கரை – ஸர்க்கர 10 “

குறிப்பு: சிலர் கீழாநெல்லிவேர் (பூதாத்ரிமூல (அ) பூ ஆமலகீமூல) 10 கிராம் கூடுதலாக சேர்த்து செய்வதுண்டு.

இவைகளை கோமூத்ரசிலாஜது நீங்கலாகப் பொடித்துச் சலித்துச் சேர்க்கவும். கோமூத்ரசிலாஜதுவை பாகம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்துச் சேர்க்கவும்.

அளவு: 

2 முதல் 5 கிராம் வரை ஒரு வேளை.

தடைபட்ட மூத்திரம், சிரமத்துடனும், எரிச்சலுடனும் சிறுநீர் கழித்தல் (மூத்ரக்ரிச்சர) போன்ற சிறுநீர் நோய்கள், பிரமேகம் (ப்ரமேஹ), உடலுள்ளுறுப்புகளிலேற்படும்​ ரத்தப்போக்கு (அ) குருதி அழல் (ரக்த பித்த), காமாலை (ஹாலீமாக), அடிபடுதலின் காரணமாக தசைகள் சீர்கேடடைதல் (க்ஷத), உடல் தேய்வு (க்ஷய), கைகால் எரிச்சல் (ஹஸ்த பாததாஹ), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), பிறப்புறுப்புக் கோளாறுகள் (யோனிதோஷ), வீட்டு விலக்குக் கோளாறுகள் (ருதுதோஷ (அ) ஆர்த்தவதோஷ).


தெரிந்து கொள்ளவேண்டியவை ..

ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுவாக வீர்யத்தை அதிகபடுத்த பயன்படுத்தலாம் 
தாம்பத்யதில் ஆசையில்லாத பெண்கள் ,உச்சம் அடையாத பெண்கள் ஆகியோருக்கு தரலாம் பொதுவாக பெண்களின் காமம் பெருக்கியாக தக்க துணை மருந்து கொண்டு சாப்பிட பயன்படும் 
உடல் சூட்டை தணிக்க பயன்படுத்தலாம் ,உடல் வலிவின்மைக்கும் பயன்படுத்தலாம் .
பொதுவாக பெண்களின் பிரச்சனைகளில் மிகவும் பயன்படும் மூலிகை 
தொடர்ந்து சாப்பிட்டால் எடை கூடப்பயன்படும் ..
தாய்பால் அதிகம் சுரக்க பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment